ஈரோட்டில், தனியார் மருத்துவமனையில்2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
ஈரோட்டில், தனியார் மருத்துவமனையில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினா்
ஈரோடு
ஈரோடு பெருந்துறை ரோட்டில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மதியம் 4 கார்களில் 20-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு இடையூறு இல்லாமல் அதிகாரிகள் தங்களது சோதனைகளை நடத்தினர்.
மருத்துவமனையில் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் அறையிலும், நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்தது. அங்குள்ள கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story