தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில்519 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகம்:கூடுதல் கலெக்டர் வழங்கினார்


தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில்519 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகம்:கூடுதல் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் 519 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்களை கூடுதல் கலெக்டர் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 519 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்களை கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வழங்கினார்.

கோரிக்கை மனுக்கள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 314 மனுக்கள் அளித்தனர். பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு கூடுதல் கலெக்டர் அறிவுறுத்தினார்.

இலவச பாடப்புத்தகம்

முன்னதாக மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற்கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 519 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு 2023-2024-ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம், கணக்கு, அரசு இலவச பாடபுத்தகங்களை அவர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் உட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story