ஆதிச்சநல்லூரில்யோகாசன விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆதிச்சநல்லூரில் யோகாசன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் யோகாசன விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக யோகா துறை தலைவர் துரைசாமி யோகாசன பயிற்சிகளை அளித்தார். சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் யோகாசன விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து விளக்கி பேசினார். இதில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் போலீசார் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டனர். இதில்
ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுபல்கலைக்கழகமும், திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியும் இணைந்து செய்திருந்தன.