ஆதிநாதபுரத்தில்சிறுவர், சிறுமிகளுக்கு அறிவியல் திருவிழா


ஆதிநாதபுரத்தில்சிறுவர், சிறுமிகளுக்கு அறிவியல் திருவிழா
x

ஆதிநாதபுரத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு அறிவியல் திருவிழா நடந்தது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி அருகே உள்ள ஆதிநாதபுரத்தில் வானவில் மன்றம், இல்லம் தேடி கல்வி திட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆழ்வார்திருநகரி கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய சிறுவர், சிறுமிகளுக்கான அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வ பயிற்சியாளர்கள் அறிவியல் தொடர்பான பல்வேறு பயிற்சிகளை அளித்தனர். பலூனில் தண்ணீர் இருக்கும்போது அதை தீயினால் சுட்டாலும் பலூன் வெடிக்காது, தண்ணீரில் குண்டூசியை மிதக்க வைப்பது, நீளமான பிளாஸ்டிக் கவரை சிறுவர் சிறுமிகள் கூட எளிதாக ஊதி கவரில் காற்றை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு அறிவியல் தொடர்பான செய்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஆழ்வார்திருநகரி வட்டார செயலாளர் சேகர், நகர தலைவர் சதீஷ்குமார், தென்கரை குளம் பாசன உறுப்பினர் மோகன்ராஜா, பள்ளிக் கல்வித் துறையினர் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story