ஏரல் தாமிரபரணி உறைகிணற்றில் 20 கிலோ காப்பர் ஒயர்கள் திருட்டு


ஏரல் தாமிரபரணி உறைகிணற்றில் 20 கிலோ காப்பர் ஒயர்கள் திருட்டு
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 4:05 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் தாமிரபரணி உறைகிணற்றில் 20 கிலோ காப்பர் ஒயர்களை திருடிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள குரங்கணி தாமிரபரணி ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகார வாரியம் சார்பில் உரை கிணறு அமைக்கப்பட்டு குடிதண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உறைகிணற்றில் உள்ள மோட்டார் உடன் இணைக்கப்பட்டு இருந்த 20 கிலோ காப்பர் ஒயர்களை கடந்த 22-ந் தேதி மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மங்கலகுறிச்சி வேதநாயகம் (வயது 64), குரங்கணி சன்னதி தெரு ஜெயபாண்டியன் மகன் ஜெயமுருகன் ( 34) ஆகியோரை அந்த காப்பர் ஒயர்களை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த 2 பேரையும் ஏரல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 12 கிலோ காப்பர் ஒயர்களை மீட்டனர்.


Next Story