அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள்


அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:47 PM GMT)

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் 2 நாட்கள் நடக்கின்றன.

தேனி

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகளுக்காக முதற்கட்ட சிறப்பு முகாம்கள் கடந்த 12, 13-ந்தேதிகளில் நடந்தன. அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் நடக்கின்றன. முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் கொடுக்கலாம். இத்தகவலை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story