அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.26½ லட்சத்துக்கு ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.26½ லட்சத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:30 PM GMT (Updated: 2023-01-25T01:00:30+05:30)

விவசாய விளைபொருட்கள்

ஈரோடு

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.26½ லட்சத்துக்கு ஏலம் போனது.

கொப்பரை தேங்காய்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு 2ஆயிரத்து 714 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இது (கிலோ) குறைந்தபட்சம் 22 ரூபாய்க்கும், அதிகபட்சம் 24 ரூபாய் 50 காசுக்கும் என மொத்தம் 55 ஆயிரத்து 607 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கொப்பரை தேங்காய் 32 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 219-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 569-க்கும் என மொத்தம் ரூ.78 ஆயிரத்து 616-க்கு விற்பனை செய்யப்பட்டன.

துவரை

மக்காச்சோளம் 4 மூட்டைகள் வந்தன. இது (கிலோ) குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 23 ரூபாய் 16 காசுக்கும் என மொத்தம் 6 ஆயிரத்து 925 ரூபாய்க்கு ஏலம் போனது. துவரை 467 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக 5 ஆயிரத்து 769 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 7 ஆயிரத்து 259 ரூபாய்க்கும் என மொத்தம் 24 லட்சத்து 9 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையானது.

உளுந்து 3 மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இது (கிலோ) 62 ரூபாய் 69 காசு முதல் 63 ரூபாய் 69 காசு வரை என மொத்தம் 16 ஆயிரத்து 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

விவசாய விளைபொருட்கள் ஏலம்

தட்டைப்பயிர் 8 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரத்து 219 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 8ஆயிரத்து 517 ரூபாய்க்கும் என மொத்தம் 37 ஆயிரத்து 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. பாசிப்பயிர் 3 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக ரூ.6ஆயிரத்து 69-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.10 ஆயிரத்து 57-க்கும் என மொத்தம் ரூ.17ஆயிரத்து 46-க்கு விற்பனை செய்யப்பட்டன.

விவசாய விளைபொருட்கள் மொத்தம் 26 லட்சத்து 21 ஆயிரத்து 636 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் விவசாய விளைபொருட்களை ஏலத்தில் எடுத்துச் சென்றனர்.


Next Story