அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புோனது
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் 2 ஆயிரத்து 246 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.17.07-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22.17-க்கும் என மொத்தம் ரூ.30 ஆயிரத்து 773-க்கு விற்பனை ஆனது. 71 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 917-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 459-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 314-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.18 லட்சம்
எள் 10 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது கிலோ ஒன்று ஒரே விலையாக ரூ.147.39 என மொத்தம் ரூ.36 ஆயிரத்து 553-க்கு விற்கப்பட்டது. 8 மூட்டைகளில் ஆமணக்கை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று ஒரே விலையாக ரூ.65.89 என மொத்தம் ரூ.34 ஆயிரத்து 385-க்கு விற்பனை ஆனது.
பருத்தி 923 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 729-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 229-க்கும் என மொத்தம் ரூ.18 லட்சத்து 34 ஆயிரத்து 335-க்கு ஏலம் போனது. ஈரோடு, திருப்பூர், கோவை, சத்தியமங்கலம், பெருந்துறை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து விவசாய விளைபொருட்கள் வாங்கி சென்றனர்.