அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
பருத்தி ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 3 ஆயிரத்து 184 தேங்காய் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் சிறிய தேங்காய் ஒன்று 6 ரூபாய்க்கும், பெரிய தேங்காய் ஒன்று 14 ரூபாய் 63 காசுக்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 854-க்கு விற்பனை ஆனது. கொப்பரை தேங்காய்களை 52 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 71-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 469-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 596-க்கு விற்பனை செய்யப்பட்து. 79 மூட்டைகளில் மக்காச்சோளம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 89-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 209-க்கும் விற்கப்பட்டது.
பருத்தி
பருத்தி 1132 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 91-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 594-க்கும் என மொத்தம் ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 238-க்கு ஏலம் போனது. ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து விவசாய விளைபொருட்களை ஏலம் எடுத்து சென்றனர்.