அந்தியூர் குருநாதசாமி கோவிலில் சுப்ரீம் கோா்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் சாமி தரிசனம்


அந்தியூர் குருநாதசாமி கோவிலில் சுப்ரீம் கோா்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் சாமி தரிசனம்
x

சுப்ரீம் கோா்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் சாமி தரிசனம்

ஈரோடு

அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோா்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான சதாசிவம் தனது குடும்பத்தினருடன், புதுப்பாளையம் மடப்பள்ளி கோவிலுக்கு நேற்று வந்தார். அவரை கோவில் பரம்பரை அறங்காவலர் பி.எஸ்.எஸ்.சாந்தப்பன் வரவேற்றார். பின்னர் கோவிலில் அவர் தனது குடும்பத்தினருடன் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story