அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.5 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.5 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனையானது.
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைப்பழம் ஏலம் நடைபெற்றது. இந்த சங்கத்துக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,450 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் கதலி வாழைப்பழம் கிலோ ஒன்று ரூ.55-க்கும், நேந்திரம் ரூ.33-க்கும் விற்பனை ஆனது. செவ்வாழை (தார் ஒன்று) ரூ.850-க்கும், பூவன் ரூ.760-க்கும், ரஸ்தாளி ரூ.720-க்கும், தேன்வாழை ரூ.840-க்கும், மொந்தன் ரூ.320-க்கும், ரொபஸ்டா ரூ.520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார் மொத்தம் ரூ.4 லட்சத்து 95 ஆயிரத்து 640-க்கு ஏலம் போனது. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோவை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story