அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை ஆனது.
கால்நடை சந்தை
அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர், மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, தர்மபுரி, எடப்பாடி, பர்கூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.60 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.35 ஆயிரத்துக்கும், சிந்து பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்துக்கும், பர்கூர் இன பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.10 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
ரூ.1¾ லட்சம்
கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், பர்கூர் இன காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு, பெருந்துறை, பொள்ளாச்சி, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் இங்கு வந்து மாடுகளை வாங்கி சென்றனர்.