அறச்சலூரில் சமூகநீதி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அறச்சலூரில் சமூகநீதி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 2:18 AM IST (Updated: 21 Jun 2023 7:49 AM IST)
t-max-icont-min-icon

அறச்சலூரில் சமூகநீதி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஈரோடு

மொடக்குறிச்சி அருகே வடுகபட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்காக வழங்கப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு நிலமில்லாத பட்டியலின விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் வீதம் நிலம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதி மக்கள் கட்சி சார்பில் அறச்சலூரில் நில மீட்பு ஊா்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இந்தநிலையில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி சமூக நீதி மக்கள் கட்சி சார்பில் அறச்சலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவன தலைவர் வடிவேல் ராமன் தலைமை தாங்கி பேசினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் விடுதலை கட்சி நிர்வாகிகள் சகுந்தலா தங்கராஜ், ஆறுமுகம், தலித் விடுதலை இயக்க நிர்வாகிகள் பொன்.சுந்தரம், கிச்சா, நதியா, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், ஜெய்பீம் மக்கள் கட்சி தலைவர் அறிவழகன், திராவிடர் எழுச்சி பேரவை நிர்வாகி சக்திவேந்தன், திராவிடர் தமிழர் கட்சி நிர்வாகி சிவக்குமார், கொங்கு விடுதலை புல்கள் கட்சி நிர்வாகி விசுவநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பழனிசாமி, சமூக விடுதலை கட்சி நிர்வாகி ஆறுமுகம், மாவீரன் பொல்லான் பேரவை நிர்வாகி சண்முகம், சமூகநீதி மக்கள் கட்சி நிர்வாகிகள் எம்.கே.ஆறுமுகம், கண்ணையன், மணிகண்டன், கோவிந்தராஜ் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story