ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆணி உத்திரதிருவிழா வெள்ளிக்கிழமை தொடக்கம்
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆணி உத்திரதிருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆணி உத்திர திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனை ஒட்டி இன்று காலை சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்று கொடி பட்டம் வீதி உலாவும், அதனை தொடர்ந்து கும்ப பூஜை, ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது தொடர்ந்து காலை 5.30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெறுகிறது. ஆனித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
வரும் 25-ந்தேதி பத்தாம் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் இரவு ஆன்மீக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், பக்தி பட்டிமன்றம், சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், தேவாரம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story