ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில்   குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நகர பஞ்சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி செல்வி பிளாரன்ஸ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கே கணேசன், ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் மகராஜன், மதர் சேவை தொண்டு நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில நிறுவனருமான எஸ். ஜே. கென்னடி, மாவட்ட பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்கள் மேம்பாட்டு நிறுவன தலைவர் எ. ராஜ்கமல், துணைத்தலைவர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினா். நிகழ்ச்சியில் நகர பஞ்சாயத்து துணை தலைவர் குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த கையேடுகளை பெண்களுக்கு வழங்கினார்.

---


Next Story