ஆத்தூரில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்


ஆத்தூரில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

கிராம உதயம் தொண்டு நிறுவனமும், தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் அமைப்பும் இணைந்து ஆத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தியது. கிராம உதயம் அமைப்பாளர் வேல்முருகன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பெண்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கிராம உதயம் அமைப்பின் உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய அடையாள அட்டையையும், மரக்கன்றுகள், மஞ்சள் நிற பைகள் ஆகியவற்றையும் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி சார்பு நீதிபதி பிருந்தா, கிராம உதயம் அமைப்பு நிறுவனர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சிவசங்கரன், மாவட்ட சமுக நலத்துறை அதிகாரி ஜெரின் ஜெரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


Next Story