ஆத்தூரில் சாலைகளில் உலாவரும் மாடுகள் கோசாலையில்அடைக்கப்படும்: அதிகாரி எச்சரிக்கை


ஆத்தூரில்  சாலைகளில் உலாவரும் மாடுகள்  கோசாலையில்அடைக்கப்படும்: அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் சாலைகளில் உலாவரும் மாடுகள் கோசாலையில்அடைக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆத்தூர் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும்.

மாடுகள் ஆத்தூர் நகர மெயின் பஜார் மற்றும் பஸ் நிலையங்களில் உலா வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்தும் பெரும் இடையூறாக இருக்கிறது. எனவே கால்நடை உரிமையாளர்கள் வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும். இதை மீறிமாடுகளை சாலைகளில் அவிழ்த்து விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே மாடுகளை வீடுகளில் கட்டி வளர்க்க தவறினால், சாலைகளில் உலாவரும் மாடுகள் பிடிக்கப்பட்டு, குலசேகரப்பட்டினத்தில் உள்ள கோசாலையில் அடைக்கப்படும், என தெரிவித்துள்ளார்.


Next Story