ஆத்தூரில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆத்தூரில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆத்தூர் மெயின் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கட்சி பொறுப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் செ. குளோரியான், மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தாமிபரணி ஆற்றில் தனியார் தொழிற்சாலைகள் தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சிமாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். திருச்செந்தூர் தொகுதி பொருளாளர் அன்சர் அலி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர் பாக்கியராஜ், ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் தாமஸ், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், இணை செயலாளர் ராம்குமார், உட்பட பல கலந்து கொண்டனர்.