பேரிலோவன்பட்டி பள்ளியில் மின்சிக்கன விழிப்புணர்வு கருத்தரங்கு
பேரிலோவன்பட்டி பள்ளியில் மின்சிக்கன விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
எட்டயபுரம்:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட, ஊரகக் கோட்டத்தின் சார்பில், மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி தி. வெ. அ. நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கருத்தரங்கிற்கு உப கோட்ட உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர்கள் செல்வகுமார், பிரவீனா, சுரதா, ஜோசப் சுந்தர் மற்றும் பணியாளர்கள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில், மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு, மின் நுகர்வோர் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துவது, மின் இணைப்பு எண்ணில் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பள்ளி முதல்வர் ரெஜிலா நன்றி கூறினார்.