பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.3 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.
அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 3 ஆயிரத்து 112 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் சிறிய தேங்காய் ஒன்று ரூ.6-க்கும், பெரிய தேங்காய் ஒன்று ரூ.10.70-க்கும் என மொத்தம் ரூ.24 ஆயிரத்து 498-க்கு விற்பனை ஆனது. 91 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 589-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 501-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 843-க்கு விற்பனை செய்யப்பட்டது. நிலக்கடலை 29 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 651-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 808-க்கும் என மொத்தம் ரூ.65 ஆயிரத்து 973-க்கு விற்கப்பட்டது. விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 314-க்கு ஏலம் போனது.