பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.4½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்


பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.4½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
x
தினத்தந்தி 4 Jan 2023 1:00 AM IST (Updated: 4 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

விளைபொருட்கள் ஏலம்

ஈரோடு

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.4½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

கொப்பரை தேங்காய்

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 1,724 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டது. இதில் சிறிய தேங்காய் ஒன்று 8 ரூபாய் 8 காசுக்கும், பெரிய தேங்காய் ஒன்று 15 ரூபாய் 16 காசுக்கும் என மொத்தம் 17 ஆயிரத்து 442 ரூபாய்க்கு விற்பனையானது.

கொப்பரை தேங்காய் 49 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 9-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 817-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 243-க்கு விற்பனையானது.

நிலக்கடலை

நிலக்கடலை 42 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.7ஆயிரத்து 430-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து210-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 313-க்கு ஏலம் போனது. நெல் 57 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்து400-க்கும், அதிகபட்சமாக ரூ.2ஆயிரத்து540-க்கும் என மொத்தம் ரூ.87ஆயிரத்து266-க்கு விற்பனையானது.

மக்காசோளம் 59மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்து46-க்கும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து269-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 723-க்கு ஏலம் போனது.

ரூ.4½ லட்சத்துக்கு விற்பனை

சோயாபீன்ஸ் 3 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இது (குவிண்டால்) ரூ.3 ஆயிரத்து 919-க்கு என மொத்தம் ரூ.6ஆயித்து 623-க்கு விற்பனையானது. தட்டைப்பயிறு 1 மூட்டை ஏலத்துக்கு வந்தது. இது (குவிண்டால்) ரூ.7 ஆயிரத்து 179-க்கு என மொத்தம் ரூ4ஆயிரத்து 666-க்கு விற்பனையானது. மொத்தம் விவசாய விளைபொருட்கள் ரூ.4லட்சத்து 56ஆயிரத்து 276-க்கு விற்பனை செய்யப்பட்டது.


Next Story