சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.49¾ லட்சம்


சென்னிமலை முருகன் கோவிலில்  உண்டியல் காணிக்கை ரூ.49¾ லட்சம்
x

சென்னிமலை முருகன் கோவில்

ஈரோடு

சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்த், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், பெருந்துறை கோவில் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.

இதில் பக்தர்களின் காணிக்கையாக 48 லட்சத்து 87 ஆயிரத்து 159 ரூபாயும், தங்க நகை 153 கிராமும், வெள்ளி நகை 2 ஆயிரத்து 215 கிராமும் இருந்தது.

மேலும் திருப்பணி உண்டியலில் 92 ஆயிரத்து 167 ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக இருந்தது. இரு உண்டியல்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.49 லட்சத்து 79 ஆயிரத்து 326 இருந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பெருந்துறை நந்தா கல்லூரி மாணவ, மாணவிகள், வங்கி ஊழியர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


Next Story