சேர்வைக்காரன்மடத்தில்ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்:வி.பி.ஜெயக்குமார்


சேர்வைக்காரன்மடத்தில்ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்:வி.பி.ஜெயக்குமார்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சேர்வைக்காரன்மடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வி.பி.ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியும், அதன் அருகில் ஊர் பொது கிணறும் இருந்தது. அந்த மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் இருந்து சுற்று வட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது புதிதாக ஒரு மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டியதால், அரசு பொது இடத்தில் இருந்த பழைய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை இடித்து அகற்றி விட்டு, கிணற்றையும் மூடிவிட்டு அருகில் சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அப்பகுதியை இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், சேர்வைக்காரன்மடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும். இதுகுறித்து கலெக்டரிடம் வலியுறுத்தப்படும் என்றார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் சக்திவேலன், மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், ஊர் தலைவர் அருள் ஞான கணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story