சீனாபுரம் கால்நடை சந்தையில்ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை
சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.
பெருந்துறை
சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.
கால்நடை சந்தை
பெருந்துறையை அடுத்த சீனாபுரம் கால்நடை சந்தையில் நேற்று முன்தினம் மாடுகள் விற்பனை நடைபெற்றது.
இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்ப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 100-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 150-ம் விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனா்.
ரூ.1 கோடி
இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 125-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 200-ம் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன.
இதில் விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்பட்டது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
சீனாபுரம் கால்நடை சந்தையில் மாடுகள் மொத்தம் ரூ.1 கோடி வரை விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். ஈரோடு, பெருந்துறை, அவல்பூந்துறை, சென்னிமலை, ஊத்துக்குளி, காங்கேயம், செங்கப்பள்ளி, குன்னத்தூர், திங்களூர், நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், நசியனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை விலை பேசி பிடித்து சென்றனர்.