சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை


சீனாபுரம் கால்நடை சந்தையில்   ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
x

சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.

ஈரோடு

பெருந்துறை, அக்.8-

சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.

கால்நடை சந்தை

பெருந்துறையை அடுத்து உள்ள சீனாபுரத்தில் கால்நடை சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்ப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 50-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 100-ம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 50-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 100-ம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

இதில் விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.23 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.

ரூ.40 லட்சம்

இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறுகையில், 'சந்தைக்கு கால்நடைகள் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால் மாடுகள் விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. இதனால் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகளில் பாதி அளவுக்கே (50 சதவீதம்) விற்பனை ஆனது. இதனால் விற்பனை ஆகாத மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை விவசாயிகள், வியாபாரிகள் மீண்டும் வீட்டுக்கு கொண்டு சென்றனர். எனினும் சந்தையில் ரூ.40 லட்சம் வரை மாடுகள் விற்பனை ஆயின,' என்றனர்.


Related Tags :
Next Story