சீனாபுரம் சந்தையில்ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
சீனாபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது
சீனாபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.
கால்நடைகள்
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் நேற்று கால்நடைச் சந்தை கூடியது. இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 90-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 120-ம் விற்பனைக்கு வந்திருந்தன. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 150-ம், இது தவிர எருமைக்கன்றுகள் 10-ம் கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்த சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்து இருந்த போதிலும், தீவன பற்றாக்குறை காரணமாக மாடுகள் மற்றும் கன்றுகள் கணிசமாக விலை குறைந்து விற்பனையானது.
ரூ.1 கோடிக்கு விற்பனை
விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், எருமைக்கன்றுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விலை போனது.
சீனாபுரம் கால்நடைச் சந்தையில் நேற்று மாடுகள் மற்றும் கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடி வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த கால்நடைகளை திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் வாங்கிச் சென்றனர்.