சீனாபுரம் சந்தையில்ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை
சீனாபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனையானது.
பெருந்துறை
சீனாபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனையானது.
மாட்டுச்சந்தை
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன.
இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 90-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 120-ம் விற்பனைக்கு வந்திருந்தன.
சிந்து மற்றும் ஜெர்சி இன கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 150-ம், எருமை கிடாரிக்கன்றுகள் 10-ம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன.
சிந்து மற்றும் ஜெர்சி
விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்றது.
சிந்து மற்றும் ஜெர்சி இன கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனையானது.
எருமை கிடாரி
எருமை கிடாரி கன்று ஒன்று ரூ.22 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரம் வரை விற்பனையானது. ரூ.1 கோடி வரை மாடுகள் விற்பனையாகி இருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி வாகனங்களில் கொண்டு சென்றனர்.