சீனாபுரம் சந்தையில்ரூ.75 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை


சீனாபுரம் சந்தையில்ரூ.75 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
x

சீனாபுரம் சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் மாட்டுச்சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 60-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 120-ம், சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 75-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 150-ம் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.

சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.17 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. சீனாபுரம் சந்தையில் மாடுகள் மொத்தம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை ஆனது.

திருப்பூர், ஊத்துக்குளி, குன்னத்தூர், கோபி, திங்களூர், நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், அறச்சலூர், சென்னிமலை, அவல்பூந்துறை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் இங்கு வந்து மாடுகளை விலைபேசி பிடித்து சென்றனர்.


Related Tags :
Next Story