சின்னத்தும்பூரில், மக்கள் நேர்காணல் முகாம்


சின்னத்தும்பூரில், மக்கள் நேர்காணல் முகாம்
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே சின்னத்தும்பூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 162 பேருக்கு ரூ.56½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் அருகே சின்னத்தும்பூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 162 பேருக்கு ரூ.56½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

மக்கள் நேர்காணல் முகாம்

கீழ்வேளூர் அருகே சின்னத்தும்பூர் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் வரவேற்றார்.

நலத்திட்ட உதவிகள்

முகாமில் இலவச வீட்டு மனைப்பட்டா, தையல் எந்திரங்கள், வங்கி கடன் மானியம் வேளாண்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 162 பேருக்கு ரூ.56 லட்சத்து 54 ஆயிரத்து 550 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஏதுவாக மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்படுகிறது. முகாமின் நோக்கம் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பது தான். நலத்திட்டங்கள் தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டும். இதுபோன்ற அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவிகளை அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் நேர்காணல் முகாம் நடத்தப்படுகிறது. நாகை மாவட்டத்தில் புதிதாக 60 வகுப்பறை கட்டிடங்களும், 10 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களும் கட்டப்பட்டுள்ளது.

வீட்டுக்கு வீடு குடிநீர்

மேலும் 15-வது மானிய நிதியின் கீழ் ரூ.1752 கோடி மதிப்பீட்டில் வீட்டிற்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், சின்னத்தும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா முருகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story