தூத்துக்குடி தருவைகுளத்தில் அதிகமாக பிடிபடும் முரல் மீன்கள்: மீனவர்கள் மகிழ்ச்சி


தூத்துக்குடி தருவைகுளத்தில் அதிகமாக பிடிபடும் முரல் மீன்கள்: மீனவர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 4:33 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தருவைகுளத்தில் அதிகமாக முரல் மீன்கள்பிடிபடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் 200 ஆழ்கடல் விசைப்படகுகளும், 150 க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் உள்ளன. இங்கிருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களின் வலையில் பாறை மீன், ஊளிமீன், விளமீன், கனவாய், சீலா மீன் உள்ளிட்ட மீன்கள் கிடைத்து வந்தன. தற்போது காற்றின் வேக மாறுபாடு காரணமாக முரல் மீன்கள் அதிகமாக பிடிபடுகின்றன. இந்த முரல் வகை மீன்கள் மெலிதான நீளம் தோய்ந்த பச்சை, கருப்பு ஆகிய வண்ணத்தில் இருக்கும். இதில் பச்சைமுரல், கருமுரல், வாளைமுரல் என பல்வேறு வகைகள் இருக்கின்றன. தற்போது தூத்துக்குடி தருவைகுளம் மீனவர்களின் வலையில் பச்சைமுரல், கருப்புமுரல், வாளைமுரல் மீன்கள் அதிகமாக கிடைக்கிறது. இதில், பச்சை வகை முரல் மீனகள் நல்ல விலைக்கு விற்பனையாவதால் மீனவர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இந்த மீன்களில் உள்ள பற்கள் நிறைந்த நீண்ட அலகு காயத்தையும், சிலவேளைகளில் உயிரிழப்பையும் ஏற்படுத்தக் கூடியது. இதில் தூத்துக்குடி பகுதியில் பச்சை, கருப்பு, வாளை வகை முரல்கள் மட்டுமே தற்போது பிடிபடுகின்றன என்று கூறினார். . தருவைகுளம் மீன் ஏலக்குடத்தில் நேற்று பச்சை முரல் கிலோ ரூ.240 க்கும் கருப்பு முரல் கிலோ ரூ.190 க்கும், வாளை முரல் கிலோ ரு.160 க்கும், சூரை மீன் கிலோ ரூ.70-க்கும் கேரை மீன் கிலோ ரூ.100 க்கும் விற்பனை செய்யப்பட்டது.


Next Story