தருவைகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில்ரூ.45 லட்சத்தில் புதிய தேர்க்கூடம்


தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தருவைகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ரூ.45 லட்சத்தில் புதிய தேர்க்கூடத்தை பிஷப் ஸ்டீபன் அந்தோணி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் புதிய தேர்க்கூடம் ரூ.45 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு புதிய தேர்க்கூடத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட 2 சிறிய சப்பரங்கள், ஒரு தேர் ஆகியவற்றுக்கு பங்குதந்தை வின்சென்ட் அர்ச்சிப்பு செய்தார். பின்னர் பங்கு மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்து தேர்க்கூடத்தில் நிறுத்தினர். இதனை தொடர்ந்து வேதமந்திரங்களை முறையாக படித்த சிறுவர்களுக்கு உறுதிப்பூசுதல் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் மற்றும் பங்கு தந்தைகள், பங்கு மக்கள், புதிய தேர் அறை கமிட்டியினர் கலந்து கொண்டனர்.


Next Story