வெவ்வேறு இடங்களில்2 பெண்கள் தற்கொலை
வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
தேவாரம் நாடார் வடக்கு தெருவை சேர்ந்த குமார் மனைவி ராதிகா (வயது 42). இவர் தேவாரத்தில் மின்வாரிய கணக்கீட்டாளராக பணியாற்றி வந்தார். இவர், தலைவலியால் அவதியடைந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு ராதிகா தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தேவாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் ராதிகாவின் உடலை கைப்பற்்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருசநாடு அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சின்னன். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (48). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தீராத தலைவலி இருந்து வந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த பேச்சியம்மாள் கடந்த 9-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பற்றியதில் வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.