வெவ்வேறு இடங்களில்பெண் உள்பட 3 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில்பெண் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி

பெண் தற்கொலை

போடி குலாளர்பாளையம் கரட்டுபட்டி ரோட்டைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி தேவி (வயது 35). குடும்ப வறுமை காரணமாக இவர், சிரமம் அடைந்து வந்தாா். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவியின் தாய் பிரேமா போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மகன் முகேஷ் (வயது 24). இவர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை இவர், வீட்டில் யாரும் இல்லாத போது முற்றத்தில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கோம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

முதியவர் சாவு

பின்னர் முகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகேஷ் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முகேசுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் கருப்பையா (78). இவரது மனைவி இறந்துவிட்டதால் மகன் பிச்சைமணியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story