ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு


ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில்  மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
x

ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தாா்.

ஈரோடு

சோலார்

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் நேற்றுக்காலை ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்கு போலீசாரின் உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து போலீசாரின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாகனங்களின் தற்போதைய நிலை, அவற்றின் பராமரிப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் போலீசாரின் வஜ்ரா வாகனங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆயுதப்படை போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்து அவர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி பணியிடம் மாறுதல் குறித்தும் அதிகாரிகளுடன் பேசினார். பின்னர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றை விரைந்து முடிக்க கோரியும், கைதி வழிகாவலர்கள் மற்றும் காப்பு பணிகளின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அறிவுறுத்தினார். மேலும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் அனைத்து பிரிவுகள் மற்றும் பண்டக பிரிவினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அலுவலக அமைச்சுப்பணியாளர்களை நேரில் அழைத்து, அவர்கள் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு, ஆளிநர்களுக்கு பணப்பயன்களை விரைவாக பெற்று தர அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், துணை சூப்பிரண்டு சேகர் உள்பட உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story