ஈரோடு பஸ் நிலையத்தில்டிரைவர்-பயணிகள் இடையே கடும் வாக்குவாதம்


ஈரோடு பஸ் நிலையத்தில்டிரைவர்-பயணிகள் இடையே கடும் வாக்குவாதம்
x

ஈரோடு பஸ் நிலையத்தில் டிரைவர்-பயணிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து தினமும் நள்ளிரவு 12.30 மணிக்கு ஊட்டி வழியாக கூடலூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை விட்டு விட்டால் அதைத்தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு தான் கூடலூருக்கு பஸ் வசதி உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு ஈரோட்டில் இருந்து கூடலூர் செல்லும் பஸ் ஈரோடு மினி பஸ் நிலையத்தில் நின்றிருந்தது. டிரைவரும், கண்டக்டரும் பஸ்சின் கதவை பூட்டிவிட்டு உள்ளே இருந்தனர். அப்போது பயணிகள் அனைவரும் சீட்டு போடுவதற்காக தங்கள் கைகளில் இருந்த பொருட்களை ஜன்னல் கண்ணாடி வழியாக உள்ளே போட்டனர். இதைப்பார்த்த கண்டக்டரும், டிரைவரும் பயணிகள் உள்ளே போட்ட பொருளை எடுத்து வெளியே வீசினர். இதனால் டிரைவருக்கும், பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பயணிகள் கூறும்போது, 'கோவை ரேக்கில் பஸ்சை போட வேண்டியதுதானே? ஏன் மினி பஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து போடுகிறார்கள் என்று தெரியவில்லை. ரேக்கில் போட்டால் நாங்கள் பஸ்சிலாவது அமர்ந்திருப்போம். ஆனால் இங்கு கொண்டு வந்து போடுவதால் நாங்கள் குழந்தை, குட்டிகளுடன் வெகுநேரமாக பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டிரைவர், கண்டக்டர்களுடன் சேர்ந்து ஈரோடு பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருக்கும் போலீசாரும் எங்களை விரட்டுகிறார்கள். எனவே மினி பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தாமல் கோவை ரேக்கில் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story