ஈரோடு கனி மார்க்கெட்டில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்


ஈரோடு கனி மார்க்கெட்டில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
x

ஈரோடு கனி மார்க்கெட்டில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு கனி மார்க்கெட்டில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜவுளி கடைகள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

கனி மார்க்கெட்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி கடைகள் செயல்பட்டன. இங்கு 200-க்கும் மேற்பட்ட நிரந்தர கடைகளும், 730 வாரச்சந்தை கடைகளும் இருந்தன. இந்த வளாகத்தில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு கட்டப்பட்டு உள்ள கடைகளை, ஏற்கனவே அங்கு கடை வைத்து இருப்பவர்களுக்கு ஒதுக்குவதாக கூறி வழங்கப்படவில்லை.

அதற்கு பதிலாக மாத வாடகையாக ரூ.31 ஆயிரத்து 500-ம், வைப்பு தொகையாக ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையும் செலுத்த வேண்டும் என கூறியதால் யாரும் கடைக்கு செல்வில்லை. இதனால் வணிக வளாகம் தற்போது மூடிக்கிடக்கிறது. இதற்கிடையில் கனி மார்க்கெட்டில் உள்ள தற்காலிக கடைகளை கோர்ட்டு உத்தரவுப்படி, மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. தீபாவளி வரை கடை நடத்திக்கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.

தற்காலிக கடைகள்

இந்த நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை பழைய இடத்தில் செயல்பட சென்னை ஐகோர்ட்டில் வியாபாரிகள் உத்தரவு பெற்றனர். அதையும் மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்த விடாமல் தடுத்த நிலையில், நேற்று மீண்டும் அனுமதி பெற்று, தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கியது.

இதுபற்றி, கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறும்போது, 'வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை பழைய இடத்தில் கடை அமைத்து ஜவுளி வியாபாரம் செய்து கொள்ள கோர்ட்டில் உத்தரவு பெற்றுள்ளோம். பழைய இடத்தில் 80 கடைகள் அமைக்க ரூ.5 லட்சம் வரை செலவாகும். இருந்தாலும், தீபாவளி விற்பனையை நம்பி, இங்கு செயல்பட உள்ளோம். கடைகள் அமைக்கும் பணி முடிந்ததும் மீண்டும் ஜவுளி விற்பனை தொடங்கும்' என்றார்.


Related Tags :
Next Story