ஈரோடு மார்க்கெட்டில்தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி


ஈரோடு மார்க்கெட்டில்தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
x

ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிலோ ரூ.160-க்கு விற்பனை

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, தாராபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்ததால் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையானது.

அதன் பின்னர் விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்மாக ரூ.160-க்கு விற்பனை ஆனது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தக்காளி பயன்பாட்டையும் குறைத்துக்கொண்டனர்.

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

தற்போது ஈரோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 11-ந்தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.55-க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில் நேற்று ஈரோடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கிருஷ்ணகிரி, தாராபுரம் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து 5 ஆயிரம் பெட்டிகள் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வரத்து அதிகரிப்பால் நேற்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.15 வரை குறைந்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை ஆனது. தக்காளி வரத்தை பொறுத்து வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story