ஈரோட்டில் போலி மதுபான ஆலை வழக்கில் சிக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ஈரோட்டில்  போலி மதுபான ஆலை வழக்கில் சிக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

ஈரோட்டில் போலி மதுபான ஆலை வழக்கில் சிக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு

ஈரோட்டில் போலி மதுபான ஆலை வழக்கில் சிக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

போலி மதுபான ஆலை

ஈரோடு சூளை பகுதியில் செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலையை கடந்த மாதம் 9-ந்தேதி மதுவிலக்கு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து மதுபான ஆலையை நடத்திய ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதுகுளத்தூரை சேர்ந்த அண்ணாச்சி என்ற வீரபாண்டி (51), முதுகுளத்தூரை சேர்ந்த மலைராஜ் (34), அசோக்குமார் (33), சித்திரைவேல் (35), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முகேஷ் (38), கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஜெகதீஸ் (40) உட்பட 9 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான ஸ்பிரிட், 2 எந்திரங்கள், 50 போலி மதுபான பாட்டில்கள், ஹாலோ கிராம் ஸ்டிக்கர்கள், ஒரு வேன் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இதில், முக்கிய குற்றவாளியான வீரபாண்டி, முகேஷ் ஆகியோர் தொடர்ந்து சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று வீரபாண்டி, முகேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வீரபாண்டி, முகேஷ் ஆகிய இருவரும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் ஈரோடு மதுவிலக்கு போலீசார் வழங்கினர்.


Next Story