ஈரோட்டில்தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள், எருமை கன்றுக்குட்டி பலி


ஈரோட்டில்தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள், எருமை கன்றுக்குட்டி பலி
x

ஈரோட்டில் தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள், ஒரு எருமை கன்றுக்குட்டி பலியானது.

ஈரோடு

ஈரோட்டில் தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள், ஒரு எருமை கன்றுக்குட்டி பலியானது.

தெருநாய்கள் கடித்தது

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வில்லரசம்பட்டி ஒண்டிக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 60). இவர் ஒரு எருமை மாடு, அதன் கன்றுக்குட்டி மற்றும் 4 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்ற பின்னர் ஆடு, மாட்டினை வீட்டின் முன்புறம் கட்டி உள்ளார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் 4-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திடீரென பழனிசாமியின் வீட்டின் முன்பு கட்டப்பட்டு இருந்த கன்றுக்குட்டியையும், ஆடுகளையும் கடித்து குதறியது. சத்தம் கேட்டு பழனிசாமி எழுந்து வந்து தெரு நாய்களை விரட்டி அடித்தார்.

மாடு, ஆடுகள் பலி

ஆனால், அதற்குள் நாய்கள் கடித்து குதறியதில் அடுத்தடுத்து ஒரு கன்றுக்குட்டி, 4 ஆடுகள் பரிதாபமாக பலியானது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வில்லரசம்பட்டியில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் 2 ஆடுகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, 'எங்கள் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது ஆடு, மாடுகளை கடிக்க தொடங்கிய தெரு நாய்கள் எங்களையும் கடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தைகளை வெளியில் விளையாட விடவே மிகவும் பயமாக இருக்கிறது. எனவே ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்தி, இதுபோன்ற சம்பவம் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story