ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 13 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு
ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 13 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
ஈரோடு
சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்கத்திற்கு மலர் விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்த்து தேர்தல் நடத்த கோரி, ஈரோட்டில் நேற்று முன்தினம் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் 226 பேரை கைது செய்து சங்கு நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் இரவில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி உள்பட 13 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story