ஈரோட்டில்சிறுபான்மை மக்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில்சிறுபான்மை மக்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

ஈரோட்டில் சிறுபான்மை மக்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்

ஈரோடு

சிறுபான்மை மக்கள் அமைப்பு சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏசுவின் நற்செய்தி இயக்க மாநில தலைவர் சங்கர் டேனியல் தலைமை தாங்கினார்.

சி.எஸ்.ஐ.யின் ஈரோடு, சேலம் திருமண்டல செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் இசாரத்தலி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் மணிப்பூரில் சிறுபான்மை மக்களுக்கு நடந்த மனித உரிமை மீறலை கண்டித்தும், தேவாலயங்கள் இடிக்கப்பட்டதை கண்டித்தும், கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் உள்பட சிறுபான்மையினர் பலர் கலந்துகொண்டனர்.


Next Story