ஈரோட்டில்கைத்தறி கண்காட்சி-விற்பனைகலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்


ஈரோட்டில்கைத்தறி கண்காட்சி-விற்பனைகலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்
x

ஈரோட்டில் கைத்தறி கண்காட்சி-விற்பனையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்

ஈரோடு

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி துறை சார்பில், தேசிய கைத்தறி தினத்தையொட்டி மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து அவர், 10 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான முத்ரா கடன் உதவிகள் மற்றும் 10 நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்ட அட்டையினை வழங்கினார். முன்னதாக மாநகராட்சி மேயா் நாகரத்தினம், ஈரோடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில், கைத்தறி துறையின் சார்பில், முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கைத்தறித்துறை உதவி இயக்குனர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.


Next Story