ஈரோட்டில்நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரம்
தீவிர பிரசாரம்
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சீமான் பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு விவசாயி சினத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஈரோட்டிற்கு வந்து வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார்.
வீதி வீதியாக..
முன்னதாக தனது பிரசாரத்தை ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகில் சீமான் தொடங்கினார். மேலும் அவர் சுப்பிரமணியர் கோவில் வீதி, வண்டி வீரன் கோவில் வீதி, கல்லு பிள்ளையார் கோவில் வீதி, கிருஷ்ணம்பாளையம், வைராபாளையம், திருநகர் காலனி ஆகிய பகுதிகளுக்கு சென்று விவசாயி சினத்திற்கு தீவிரமாக வாக்குகள் சேகரித்தார்.
அப்போது இளைஞர்கள் பலர் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) ஈரோடு கிழக்கு தொகுதியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்ய உள்ளார்.