ஈரோட்டில்ரெயில் என்ஜின் டிரைவர்கள் உண்ணாவிரதம்
ஈரோட்டில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் உண்ணாவிரதம் இருந்தனா்
ஈரோடு
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு அகில இந்திய ரெயில் ஓட்டுனர் சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் சேலம் கோட்ட தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். தென் மண்டல துணைத்தலைவர் சுப்பிரமணியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், ரெயில்வே துறையில் உள்ள அனைத்து காலிப்பணி இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு அறைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர்களை 36 மணி நேரத்தில் மீண்டும் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் என்ஜின் டிரைவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் சங்க சேலம் கோட்ட செயலாளர் சிவகுமார், கிளை பொருளாளர் உன்னி கிருஷ்ணன் உள்பட ரெயில் என்ஜின் டிரைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story