ஈரோட்டில் ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்


ஈரோட்டில்  ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்
x

ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் நேற்று பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

ஈரோடு

ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் நேற்று பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

பூஜை பொருட்கள்

ஆயுத பூஜை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பூஜையில் பூ, பழம், பொாி, உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதன் காரணமாக ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு பூஜைக்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, மீனாட்சி சுந்தரனார் ரோடு, வீரப்பன்சத்திரம், பெரியவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூஜை பொருட்கள் விற்பனை நடந்தது. மேற்கண்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியது.

பூ -பழம்

மா இலை, வாழை மரக்கன்று, சம்பங்கி பூ, பொரி, வெள்ளை பூசணி, பழங்கள், வண்ண கலர் பொடிகள் போன்றவற்றை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். இதனால் பூ, பழங்கள் விலை நேற்று சற்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சம்பங்கி பூ ஒரு முழம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வாழை மரக்கன்று ஜோடி ரூ.20 முதல் ரூ.35 வரை விற்பனை ஆனது.

மேலும் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டிலும் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலையும் சற்று அதிகமாக இருந்தது. இதேபோல் பெரியார் நகரில் உள்ள உழவர் சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மாலையில் பல்வேறு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story