ஈரோட்டில்இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லைஅரசு பஸ் டிரைவர் கைது
ஈரோட்டில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டாா்
ஈரோடு
சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பஸ்சில் வந்தார். அந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்தில் வந்து நின்றது. அதன்பிறகு பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி சென்றனர். அந்த இளம்பெண்ணும் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது பஸ்சின் டிரைவரான ஈரோடு பெரியார்நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 51) என்பவரும் கீழே இறங்கினார். அவர் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி வழக்குப்பதிவு செய்து டிரைவர் பிரபாகரனை கைது செய்தார்.
Related Tags :
Next Story