ஈரோட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்


ஈரோட்டில்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
x

னிப்படை போலீசார் தீவிரம்

ஈரோடு

ஈரோட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ஈரோடு ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு உள்ளதாக நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து உள்ளார். இதையடுத்து ஈரோட்டில் போலீசார் உஷார்படுத்தப்பட்டார்கள். ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும், மெட்டல் டிடெக்டர் மூலமாகவும் சோதனையிடப்பட்டது. இதனால் ஈரோடு மாநகரம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசாரும் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புரளி என்பது தெரியவந்தது. எனவே மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-

தொலைபேசியில் வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே ஈரோட்டுக்கு 2 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்து உள்ளது. இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். அதே நபர்தான் இந்த மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் புரளியை கிளப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story