ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை


ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை
x
தினத்தந்தி 14 Jun 2023 3:20 AM IST (Updated: 14 Jun 2023 12:14 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு

ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திடீர் சோதனை

ஈரோடு திண்டல் சக்திநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம். டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர். மதுபான குடோன்களில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்களை கொண்டு செல்வதற்கான லாரிகளின் ஒப்பந்தத்தை பெற்று உள்ளார். கடந்த மாதம் 26-ந் தேதி ஈரோட்டில் உள்ள சச்சிதானந்தத்தின் வீடு, டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 4 நாட்களாக தொடர்ந்து நடந்த இந்த சோதனையில் கோடிக்கணக்கான பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை ஈரோடு திண்டலில் உள்ள சச்சிதானந்தம் வீட்டுக்கு வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்த நபர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது என்றும், யாரிடமும் செல்போனில் பேசக்கூடாது என்றும் கூறினர்.

துணை ராணுவத்தினர்

வீட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையையொட்டி சச்சிதானந்தம் வீட்டுக்கு முன்பு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும், தாலுகா போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் 4 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடந்த வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story