ஈரோட்டில் வீட்டின் கதவை உடைக்க முயன்ற நபரால் பரபரப்பு


ஈரோட்டில் வீட்டின் கதவை உடைக்க முயன்ற நபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2023 1:44 AM IST (Updated: 21 Jun 2023 7:51 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் வீட்டின் கதவை உடைக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது

ஈரோடு

ஈரோடு ஓ.ஏ.ராமசாமி வீதியை சேர்ந்தவர் சின்னையா. இவரது வீட்டின் கதவை நேற்று அதிகாலையில் ஒருவர் கட்டிட தொழிலுக்கு பயன்படுத்தும் கட்டையால் உடைக்க முயன்றார். இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர் திருட வந்திருப்பதாக நினைத்த பொதுமக்கள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த நபரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர் குடிபோதையில் இருந்ததால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் ஓ.ஏ.ராமசாமி வீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story