ஈரோட்டில்திருமகன் ஈவெரா சாலை பெயர் பலகை


ஈரோட்டில்திருமகன் ஈவெரா சாலை பெயர் பலகை
x

ஈரோட்டில் திருமகன் ஈவெரா சாலை பெயர் பலகையை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

ஈரோடு

ஈரோட்டில் திருமகன் ஈவெரா சாலை பெயர் பலகையை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

திருமகன் ஈவெரா சாலை

ஈரோடு கச்சேரிவீதி என்ற பிரதான சாலையினை மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் நினைவாக திருமகன் ஈவெரா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வழிகாட்டி பலகை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா இல்லம் அமைந்துள்ளதால் கச்சேரி வீதியை அவரது நினைவாக திருமகன் ஈவெரா சாலை என பெயர் சூட்டிட ஈரோடு மாநகராட்சி, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி நிர்வாக இயக்குனரால் அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அதன்பேரில் கச்சேரி வீதியை திருமகன் ஈவெரா சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வழிகாட்டி பெயர் பலகை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகள்

திருமகன் ஈவெரா குறுகிய காலத்தில் தொகுதியில் சிறப்பாக பணியாற்றினார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி முன்னேற்றத்துக்காக பல பணிகளை மேற்கொள்ள முதல் -அமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தார். எதிர்பாராத விதமாக திடீரென அவர் இறந்து விட்டார். அவர் தொகுதியில் மேற்கொள்ள இருந்த வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் இருந்த இடத்தில் இருந்து அவரது தந்தையும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து பணியாற்றுவார்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.


Next Story